விஜய்யின் அடுத்த படத்தின் டைரக்டர் பாண்டிராஜ் – குடும்ப கதையா ?

பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' எனும் படத்தில் நடித்திவருகிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், எங்க வீடு பிள்ளை போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய பாண்டி ராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் கதைக்களத்திலே நடித்துவரும் விஜய் குடும்ப கதைகளாக எடுக்கும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிப்பது மிகவும் எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு பொங்கலையொட்டி அறிவிக்கப்படும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தற்காலிகமாக தளபதி 65 என பெயர்சூட்டப்பட்டு, பின்பு நிரந்தர தலைப்பு வைக்கலாம் எனவும் கூறுகின்றனர்.