விஜய்யின் பைரவா ரிலீஸ் தேதி

பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛பைரவா'. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சதீஷ் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து, இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில தினங்களில் பாடல்கள் வெளியாக உள்ளன.

அழகிய தமிழ் மகன் போன்று பைரவா படத்திலும் விஜய்யை இரண்டு வேடங்களில் நடிக்க வைத்திருக்கிறாராம் இயக்குநர் பரதன். ஒருவர் கிராமத்து பின்னணியிலும் மற்றொருவர் நகரத்து பின்னணியிலும் வாழ்வது போன்ற அவர்கள் கேரக்டர் அமைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பைரவா படம் பொங்கலுக்கு வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டது.அதேபோல் பொங்கல் விருந்தாக இரு தினம் முன்பு​ ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ளது.