விஜய்யின் மெர்சல் படத்தின் சூட்டிங்ஸ்பாட் புகைப்படம் இதோ?

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் மெர்சல். இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் 3 பர்ஸ்ட்லுக் புகைப்படங்கள் வந்துள்ளது. மேலும் சூட்டிங்ஸ்பாட் புகைப்படங்களும் ரிலீஸாகி வருகிறது. அதில் நேற்று வந்த சூட்டிங்ஸ்பாட் புகைப்படத்தில் விஜய் காஜலுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அருகில் மற்றொருவர் மானிட்டர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல நீண்ட நாட்களாக ரீஎண்ட்ரிக்காக காத்துக்கொண்டிருக்கும் நடிகர் வடிவேலு தான். தற்போது இப்படம் வடிவேலுக்கு தமிழ் சினிமாவில் மறுபடி ஒரு ரவுண்ட் வர வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.