விஜய்யின் மெர்சல் பட ஆடியோ வெளியீட்டு விழா – ரசிகர்களுக்கு ஒரு நல்ல வரவேற்பு!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் 'மெர்சல்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும் மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழா பிரபல தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாக தகவல் வந்துள்ளது. தமிழ் சினிமாவில் எந்த படத்துக்கும் ஆடியோ வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பானது இல்லை, இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.