விஜய்யுடன் இணைந்து பீகில் படத்தில் நடிக்கவிருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் !

அட்லி இயக்கும் பிகில் படத்தில் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் விஜய் நடித்து வருகிறார். அட்லி இயக்கும் பிகில் படத்தில் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சொந்த குரலில் ஒரு பாடலை பாடி உள்ளார். இதுபோல் ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடி இருக்கிறார். பெண்களை போற்றும் வகையிலும், அவர்களை சாதிக்க தூண்டும் வகையிலும் சிங்கப்பெண்ணே பாடல் உருவாகி உள்ளது. இந்த பாடலில் விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் ஒரு காட்சியில் நடிக்க உள்ளார். பல்வேறு இசை ஆல்பங்களில் ஏ.ஆர்.ரகுமான் தோன்றினாலும் படங்களில் இதுவரை நடிக்கவில்லை. இப்போது முதல் தடவையாக பிகில் படத்தில் நடிக்கிறார்.