விஜய்யுடன் நடிக்க மகேஷ் பாபுவின் கண்டிஷன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு- ராகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்து வரும் படம் 'ஸ்பைடர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியிடப்பட்டது. இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற மகேஷ் பாபுவிடம் நடிகர் விஜய்யுடன் நடிப்பதை பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்து மகேஷ் பாபு, தற்போது விஜய்யுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு சில கண்டிஷன் மட்டும் இருக்கிறது என்று கூறினார். அது என்னவென்றால், படத்தில் எனக்கும், விஜய்க்கும் சமமான கதாபாத்திரம் இருக்க வேண்டும். இப்படத்தின் கதையை திறமையான இயக்குநர் தான் இயக்க வேண்டும்.அப்படி ஒரு நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் விஜய்யுடன் இணைந்து நடிக்க தயாராக உள்ளதாக​ கூறியுள்ளார்.