விஜய்யுடன் நடிக்க மறுத்த ஸ்ரீதிவ்யா!

நடிகை ஸ்ரீதிவ்யா இதுவரை இரண்டாம் கட்ட நடிகர்களுடன் தான் நடித்து வருகின்றார். இவர் முன்னணி நடிகர்கள் என யாருடனும் ஜோடி சேரவில்லை. ஆனால், விஜய்-61ல் ஜோதிகா வெளியேற இருந்ததால், அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா நடிப்பதாக இருந்ததாம். இதற்காக அட்லீயும் அவரை சென்று பார்க்க, அந்த நேரத்தில் அதர்வாவுடன் ஒரு படத்தில் நடிக்க இவர் கமிட் ஆகியுள்ளார். அந்த படத்தின் கால்ஷீட் பிரச்சனையால் தான் விஜய்-61ல் நடிக்க முடியவில்லை என ஸ்ரீதிவ்யா வருத்தமாக கூறியுள்ளார்.