விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் அனிருத் – விஜய் 64 அப்டேட் !

விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக உறுதியான செய்திகள் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படம் குழந்தைகள் ரசிக்கும்படியாக பேண்டஸி கலந்த திரில்லர் பாணியில் உருவாகுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா மற்றும் ராஷ்மிகா மந்தானா நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.