விஜய் அண்ணா கட்டிப்பிடித்து வாழ்த்தியது மறக்கமுடியாது – கதிர் நெகிழ்ச்சி

தெறி', 'மெர்சல்' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ – விஜய் காம்போ இணைந்திருக்கும் படம், 'பிகில்'. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அதுமட்டுமன்றி, கதிர், ஜாக்கி ஷெராப் போன்றவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தவிர, 'மேயாத மான்' புகழ் இந்துஜா, '96' புகழ் வர்ஷா பொல்லம்மா போன்றவர்களும் இதில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள், பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில் தன்னுடைய பகுதியை முடித்த கதிர், “நான் சொல்ல வருவதை இந்தப் புகைப்படமே சொல்லிவிடும். விஜய் அண்ணா என்னைக் கட்டிப்பிடித்து வாழ்த்தியபோது ரொம்ப சந்தோஷமாகிட்டேன்” என எமோஷனலாகப் பகிர்ந்த கதிர், மொத்த படக்குழுவுக்கும் நன்றி சொல்யிருக்கிறார்.