விஜய் ஆண்டனியின் நீண்ட கால கனவை நிறைவேற்றினார் இளையராஜா!

கொலைகாரன்', 'அக்னிச் சிறகுகள்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். படத்தில் விஜய் ஆண்டனி, சொந்த குரலில் ஒரு பாடலை பாடுகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அது, இப்போது நிறைவேறி இருக்கிறது” என்றார். படத்தின் நாயகி ரம்யா நம்பீசனும் சொந்த குரலில், ஒரு பாடலை பாடுகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் எஸ்.கௌசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார்.