விஜய் ஆண்டனியின் படங்கள்: தெலுங்கில் வெளியீடு…

விஜய் ஆண்டனி தமிழில் நடித்த நான், சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்கள் தெலுங்கில் வெளியாகி வருகிறது. அவர்  நடித்த பிச்சைக்காரன் படத்தை தெலுங்கில் பிச்சைக்காடு என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதனால் அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் தெலுங்கு ரசிகர்களை மனதில் கொண்டு அதிக தியேட்டர்களில் வெளியாகி வருகிறது. தற்போது அவர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்துள்ள ‘காளி’ படமும் ‘காசி’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாக உள்ளது. அதேபோல் கணேசா இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படத்திற்கு தெலுங்கில்  ‘ரோஷக்காடு’ என்ற தலைப்பு வைத்துள்ளனர்.