விஜய் ஆண்டனியுடன் புதிய படத்தில் இணைந்த கஸ்தூரி!

விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், காக்கி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கஸ்தூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். அவர் இதில் டாக்டராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் ஆண்டனியுடன் பல காட்சிகளில் கஸ்தூரி இணைந்து நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.