விஜய் ஆண்டனி கவுரவ வேடத்தில்

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை தனி ஒரு மனிதனாக சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்த்து போராடுபவரான டிராபிக் ராமசாமியின் கதை இப்போது திரைப்படமாகிறது. இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவரது மனைவியாக ரோகினி நடிக்கிறார். இவர்கள் தவிர ஹீரோவாக ஆர்.கே.சுரேசும் அவருக்கு ஜோடியாக உபாஷனாவும், அம்பிகா, லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனியை அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த நன்றிக்காக விஜய் ஆண்டனி படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.