விஜய் ஆண்டனி சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுக்கிறார் – அர்ஜுன் !

விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நடிப்பில் வெளியான கொலைகாரன் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதற்கான நன்றி அறிவிப்பு சந்திப்பு நேற்று நடந்தது. பட நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாத அர்ஜூன் இதில் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது, இன்றைய சூழலில் படங்கள் வெற்றி பெறுவதே அரிதாகி வருகிறது. படத்தின் வெற்றிக்கு கதை தான் மிகவும் முக்கியம். என்னதான் பெரிய நடிகர்கள், கலைஞர்கள் பணியாற்றினாலும் கதை தான் இங்கே ஜெயிக்கும். விஜய் ஆண்டனி சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து வித்தியாசமான வெற்றி படங்களை தருகிறார். ஆஷிமா மிகவும் அர்ப்பணிப்பு உள்ள நடிகை. எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவரிடம் இருக்கிறது. யார் தயாரிப்பாளர் என்றே தெரியாமல் தான் இந்த படத்தில் நடித்தேன். இந்த படம் தெலுங்கிலும் கன்னடத்திலும் கூட மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நல்ல படம் என்றால் எந்த மக்களும் வரவேற்பு தருவார்கள்’. இவ்வாறு அவர் பேசினார்.