விஜய் ஆண்டனி படத்திற்கு பாலிவுட்டில் மவுசு !

விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நடிப்பில் வெளியான 'கொலைகாரன்' படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி, நல்ல வசூல் செய்தது. இந்நிலையில், இந்த படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை பெற இந்தி பட அதிபர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதிக தொகைக்கு கேட்கும் தயாரிப்பாளருக்கு அதன் உரிமையை கொடுப்பது என்று 'கொலைகாரன்’ பட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இந்தி பட அதிபர்களுக்கு 'கொலைகாரன்’ படம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த இந்தி பட அதிபர்கள், இந்த படத்தை வாங்குவதற்கு போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.