விஜய், சூர்யா இருவரும் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம்

விஜய்யும், சூர்யாவும் தற்போது ஐரோப்பாவில் இருப்பதாகக் தகவல் வந்துள்ளது அட்லீ இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது. விஜய் மற்றும் காஜல் அகர்வால் இருவரும் மருத்துவர்களாக  பணியாற்றும் காட்சிகளை படமாக்கிகொண்டு இருக்கிறார் அட்லீ.
குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பதால், அவர்களை அழைத்துக் கொண்டு ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள் சூர்யா, ஜோதிகாவும். அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜோதிகாவுக்கு ‘மகளிர் மட்டும்’ ரிலீஸ் இருப்பதாலும், சூர்யாவுக்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பு பாக்கி இருப்பதாலும் விரைவில் சென்னை திரும்பி விடுவார்கள் என்கிறார்கள்.