விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் பெயர் சங்க தமிழன் !

விஜய் சேதுபதி நடித்து கடந்த வருடம் 7 படங்கள் திரைக்கு வந்தன. இந்த வருடம் ரஜினியுடன் வில்லனாக நடித்த பேட்ட, திருநங்கை வேடத்தில் வந்த சூப்பர் டீலக்ஸ் ஆகிய 2 படங்கள் திரைக்கு வந்துள்ளன. அடுத்து சிந்துபாத் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.  பழம்பெரும் பட நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். இந்த படத்துக்கு பெயரிடப்படாமலேயே கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வந்தனர். தற்போது சங்கத்தமிழன் என்று பெயர் வைக்கப்பட்டு விஜய் சேதுபதியின் முறுக்கு மீசை தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர். இதில் கதாநாயகிகளாக ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். நாசர், சூரி உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கிறார்கள்.