விஜய் சேதுபதியின் சங்க தமிழன் தீபாவளி ரிலீஸ்லிருந்து விலகல் !

தீபாவளி அன்று வெளியாகவிருந்த சங்கத் தமிழன் படம் தள்ளிப்போயுள்ளதாக லிப்ரா புரடெக்க்ஷன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் நவம்பர் 8 அல்லது 15ந் தேதி ரிலீசாக கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.