Cine Bits
விஜய் சேதுபதியின் புதிய தோற்றம் !
விஜய் சேதுபதி அடுத்ததாக 'கடைசி விவசாயி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி விவசாயியாக நடிக்கிறாராம். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் இந்த கெட்டப் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.