விஜய் சேதுபதியின் 6 படங்கள். .

விஜய் சேதுபதி தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைக்கு கையில் 6 படங்களை வைத்திருக்கிறார். அவர் நடித்துள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' பிப்ரவரி 2ம் தேதி வெளியாக உள்ளது. 'இடம் பொருள் ஏவல்' என்ற படத்தில் நடித்து முடித்து சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவரின் 6 படங்களான “96,சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா” என மாறி மாறி நடித்து வருகிறார். இதனை அடுத்து சீதக்காதி படத்திலும், மணிரத்தினம் இயக்க உள்ள படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.அதன் பிறகு நடிக்க உள்ள  மாமனிதன் என்ற படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள 'சை' ரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடிக்க உள்ளார். இவற்றை தவிர புதிய இயக்குனர்கள்,மற்றும் தயாரிப்பாளர்கள் என பலரும் அவரிடம் தொடர்ந்து கதை சொல்லிக் கொண்டு  வருகிறார்களாம். இதனால் அவர் 2019 வரை மேலும் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிகிறது. தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகராக உள்ளார்.இவர் மேடைக்கு மேடை விழாக்களில் பல பொதுப் பிரச்சனைகளைப்  பற்றி பேசிக் கொண்டு வருகிறார்.