விஜய் சேதுபதியை புகழ்ந்த​ – மாதவன்

மாதவன், விஜய்சேதுபதி முதன்முதலாக இணைந்து நடித்துள்ள படம் ‘விக்ரம் வேதா’.இப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது தியேட்டர் வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்சேதுபதியுடன் நடித்தது குறித்து மாதவன் பேசும்போது, நானும் விஜய்சேதுபதியும் இந்த படத்தில் எதிரெதிர் கேரக்டர்களில் நடித்துள்ளோம். தன்னுடைய கேரக்டர் மட்டும் நன்றாக வரும் என்று விஜய்சேதுபதி நினைத்திருந்தால் இந்த படம் வேற மாதிரி வந்திருக்கும். ஆனால் கமல் எப்படி என்னிடம் ‘அன்பேசிவம்’ படத்தில் நடித்த போது நடந்து கொண்டாரோ, அதே மாதிரி விஜய்சேதுபதி மிகவும் பக்குவத்துடன் என்னிடம் நடந்து கொண்டார்.