Cine Bits
விஜய் சேதுபதி உடன் ஜோடி சேரும் ராஷி கண்ணா!

மாறுபட்ட கதாபாத்திரங்கள், புதுமையான கதைக்களம் அதன் மூலம் தொடர் வெற்றிகளையும் குவித்து வரும் விஜய் சேதுபதி தமிழ்த் திரையுலகில் அசத்திக் கொண்டிருக்கிறார். நடிப்பில் மட்டுமல்லாது இயக்கம், தயாரிப்பு, வசனம் எனப் பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். தற்போது சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், சியா ரா நரசிம்ம ரெட்டி, மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் புதிய படம் ஒன்றில் ராஷி கண்ணா உடன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.