விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு விவேக் – மெர்வின் இசை!

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு விவேக் -மெர்வின் இசையமைக்க உள்ளனர். இந்த படத்தில் நடிகை ராஷி கண்ணா, காமெடியன் / நடிகர் சூரி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள் . மேலும் தற்போது இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர். விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகினர்.அந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து புகழ் ,டோரா , குலேபகாவலி ஆகிய படங்களில் இசையமைத்தனர். அனைத்து பட பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களின் இசையில் வெளிவந்த ஒரசாத பாடல் இளைஞர்களிடையே வேற லெவல் பாராட்டுக்களை பெற்றது. மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் 2 படங்களில் விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்க உள்ளனர். இப்பொழுது விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.