விஜய் சேதுபதி படத்தின் தயாரிப்பாளர் மரணம் !

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த பைரவா, விஷாலின் தாமிரபரணி, தனுஷின் படிக்காதவன், வேங்கை ஆகிய படங்களை தயாரித்தவர் பி. வெங்கட்ராம ரெட்டி. விஜய வாகினி ப்ரொடக்ஷன்ஸின் பி. நாகிரெட்டியின் இளைய மகன் வெங்கட்ராம ரெட்டி. 75 வயதான வெங்கட்ராம ரெட்டி இன்று மதியம் 1 மணிக்கு காலமானார். அவருக்கு மனைவி பாரதி ரெட்டி, மகன் ராஜேஷ் ரெட்டி, மகள்கள் ஆராதனா, அர்ச்சனா ஆகியோர் உள்ளனர். வெங்கட்ராம ரெட்டி விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத்தமிழன் படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.