விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்த – அமலாபால் !

விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்த அமலாபால், அது  குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து நானாக விலகவில்லை. என்னிடம் ஆலோசிக்காமலே படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டனர்.
இப்படத்திற்காக நான் மும்பையில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தேன். திடீரென நான் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் எனக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பினார். ஆடை படத்தின் டீசரை பார்த்தபிறகு தான் தன்னை படத்திலிருந்து நீக்கியிருப்பார்கள் என சந்தேகிக்கிறேன். விஜய் சேதுபதி மீது தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்கிறார் அமலாபால்.