விஜய் சேதுபதி படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் !

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடம் ஏற்றுள்ளார். இதில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோரும் உள்ளனர். சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்தை தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் சர்ச்சை காட்சிகள் இருப்பதை சுட்டிக்காட்டி 'ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் படத்தை 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தொலைக்காட்சிகளிலும் இந்த படத்தை ஒளிபரப்ப முடியாது. தியாகராஜ குமாரராஜா ஏற்கனவே இயக்கிய ஆரண்ய காண்டம் படமும் ‘ஏ’ சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் திரைக்கு வருகிறது.