விஜய் டிவியுடன் ஒப்பந்தம் முடிந்தது – தமிழ் பிக் பாஸ் 3 !

விஜய் தொலைக்காட்சியுடன்  நாங்கள் போட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டுடன் நிறைவடைந்து விட்டது. தற்போது தமிழில் இந்த ஆண்டு பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இன்னும் ஒரு சில மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த போது இந்த ஆண்டின் நிகழ்ச்சி பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்ப போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது. எனவே இந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் தற்போது அரசியலில் மும்முரம் காட்டி வருவதால் அவர் இந்த சீசனில் பங்கு பெறுவாரா மாட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.