விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா காதலா!

அடுத்தடுத்து ஹிட் கொடுத்து டோலிவுட்டில் ஸ்டாராகிவிட்டார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தபோது அப்பட ஹீரோயின் ராஷ்மிகாவுடன் காதல் என கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் மிஸ்டர் காம்ரேட் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இதிலும் ராஷ்மிகா ஹீரோயின். விஜய் தேவரகொண்டாவின் சிபாரிசால் ராஷ்மிகா நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தில் லிப் டு லிப் முத்தக்காட்சியில் இருவரும் நெருக்கம் காட்டி நடித்துள்ளனர், இந்த காட்சி டீஸரிலும் இடம்பெறுகிறது. இருவருக்கும் இடையிலான காதல் உண்மைதான் என்றும் பேச்சு எழுந்துள்ளது. இருவரைப் பற்றி வரும் கிசு கிசுக்களை இவர்கள் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா தமிழிலும் கார்த்தி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.