விஜய் தேவர்கொண்டாவிற்கும் இயக்குனருக்கும் மோதலா ?

தெலுங்கில் விஜய தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கு ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடிக்கும் தமிழ் படத்துக்கும் ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டது. இது பஞ்சாயத்தானது. இருவரும் போட்டிபோட்டு டைட்டிலுக்கு உரிமை கொண்டாடினார்கள். இந்நிலையில் விஜய தேவரகொண்டா நடிக்கும் ஹீரோ டிராப் ஆகவிருப்பதாக தகவல் வருகிறது. இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஹீரோ படத்தில் நடிப்பதை விஜய தேவரகொண்டா பெண்டிங் வைத்துவிட்டாராம். இதனிடையே இயக்குனருக்கும் விஜய்க்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிகிறது.