விஜய் தேவர்கொண்டா பட ட்ரைலரை வெளியிட்ட மகேஷ் பாபு !

தெலுங்கு திரையுலக பொறுத்தவரை எந்த ஒரு பட வெளியீட்டு விழாவுக்கும் பிரபலமாக உள்ள நட்சத்திரங்களை சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம். அந்த விஷயத்தில் மகேஷ் பாபு ஒரு படி மேலாக சென்று தன்னுடைய மகரிஷி பட இசை வெளியீட்டு விழாவிற்கு, தற்பொழுது தான் வளர்ந்து வரும் இளம்நாயகனான விஜயதேவர்கொண்டாவை சிறப்பு விருந்தினராக அழைத்து ஆச்சர்யப்படுத்தினர். விஜய் தேவர்கொண்டாவும் மகரிஷி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தனது பங்களிப்பை தந்தார். தற்பொழுது விஜய் தேவர்கொண்டா மீக்கு மாத்திரம் செப்தா என்கிற படத்தை தனது தந்தை வரதன் தேவர்க்கொண்டாவுடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு மகேஷ் பாபு தனது பதில் நன்றியை விஜய்க்கு திருப்பி செலுத்திவிட்டார்.