விஜய் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு பலத்த பாதுகாப்பு !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடக்கிறது. பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கழுத்தில் அடையாள அட்டை அணிந்து இருப்பது போல் தோன்றும் விஜய்யின் புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் வெளியாகின. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது மீண்டும் விஜய் படங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு, மேலும் அதிகரிக்கப்பட்டு மொபைல் போனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைவரும் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.