விஜய் நடிக்கும் 61-வது படத்தில் ஜோதிகா நடிக்கவில்லையாம்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61-வது படத்தில் ஜோதிகாவும் நடிப்பதாக கடந்த இரண்டு நாட்களாக இணையதளங்களில் செய்தி பரவி வந்தது.ஏற்கனவே விஜய் படத்தில் காஜல்அகர்வால், சமந்தா இருவரும் நடிப்பதாக கூறப்படும் நிலையில், இன்னொரு முக்கியமான வேடத்தில் ஜோதிகா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த செய்தியை விஜய் படக்குழு திட்ட வட்டமாக மறுத்துள்ளது. விஜய் படத்தில் நடிக்க ஜோதிகாவிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இப்படியொரு செய்தியை யாரோ வதந்தி பரப்பி விட்டுள்ளனர் என்கிறார்கள்.