விஜய் பட நாயகி மீது மோசடி வழக்கு!

திருமணத்தில் ஆடுவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, நடிகை அமீஷா பட்டேல் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விஜய், மீரா ஜாஸ்மின் நடித்திருந்த புதிய கீதை படத்தில் மற்றொரு நாயகியாக நடித்திருந்தவர் அமீஷா பட்டேல். தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால், மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆட ஒப்புக்கொண்டு வந்தார். அதற்காக அவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக பவன் சர்மா என்பவர் அளித்துள்ள புகாரில், கடந்த 2016ம் ஆண்டு ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாடுவதற்காக அமீஷாவை ரூ.11 லட்சம் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் அவர் நிகழ்ச்சி தொடங்கும் சமயத்தில் கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாய் கேட்டதாகவும் கூறியுள்ளார். தாங்கள் கூடுதல் பணம் தர மறுத்ததைத் தொடர்ந்து, தங்களிடம் தகவல் தெரிவிக்காமலேயே அமீஷா புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் அவர்க்ள் கூறியிருந்தனர். அமீஷா உள்ளிட்ட 5 பேரை மார்ச் 12 தேதி மும்பை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.