Cine Bits
விஜய் மகன் சஞ்சய்காக இப்போதே இப்படியா!

தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஜய். அவரை பாக்ஸ் ஆஃபிஸ் மன்னன் என தான் அழைக்கிறார்கள். அடுத்ததாக அவர் விஜய் 63 படத்தில் இணைந்துவிட்டார். அவருக்கு சஞ்சய் என ஒரு மகன் இருக்கிறார். வெளிநாட்டில் படித்து வரும் அவர் குறும்படத்தில் நடித்து வருகிறார். அவரும் சினிமாவுக்கு நடிக்க வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் அவருக்கு இப்போதே ரசிகர்கள் மன்றம் போல தொடங்கிவிட்டார்கள். ரசிகரின் திருமணத்திற்கான கட்டவுட்டில் சஞ்சய் விஜய் ஃபேன்ஸ் கிளப் என குறிப்பிட்டுள்ளார்கள்.