விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரும் நடிகர் கருணாகரன்!

'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது சர்ச்சையானது. அவரது கருத்தை பலரும் விமர்சித்தனர். ஆனால் அதற்கு நடிகர் விஜய் எந்தப் பதில் கருத்தும் கூறவில்லை. இந்நிலையில் விஜய் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன், “குட்டிக்கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? அல்லது நடிகர்களுக்குமா? தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா” என்று கூறியிருந்தார் இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது சர்ச்சையானது. அவரது கருத்தை பலரும் விமர்சித்தனர். ஆனால் அதற்கு நடிகர் விஜய் எந்தப் பதில் கருத்தும் கூறவில்லை. இந்நிலையில் விஜய் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன், “குட்டிக்கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? அல்லது நடிகர்களுக்குமா? தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா” என்று ட்வீட் செய்திருந்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இன்று (ஏப்ரல் 19) தனது ட்விட்டர் பதிவில், நான் பொதுவாக யாரையும் வெறுப்பதில்லை. நடிகர் விஜய்க்கு எதிராக வெறுக்கத் தக்க அந்த வார்த்தையை நான் பயன்படுத்தி இருக்கக் கூடாது, அதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். அவர் நான் விரும்பும் நடிகர், அவருக்கும் இது தெரியும். சமூகவலைத்த்தில் நான் பயன்படுத்திய எந்தவொரு வார்த்தையாவது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.’’என்று தெரிவித்துள்ளார் கருணாகரன். நீண்ட காலமாக நடைபெற்று வந்த விஜய் ரசிகர்களுடனான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கருணாகரன்.