விஜய் ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட ஜோதிகா !

நடிகை ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக திருமலை, குஷி போன்ற படங்களில் நடித்தவர். அதன் பிறகு 2017ல் வெளிவந்த மெர்சல் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். அதன்பிறகு நித்யா மேனன் அந்த ரோலில் நடித்தார். இந்நிலையில் ஜோதிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது பற்றி பேசியுள்ளார். “படத்தின் ஸ்கிரிப்ட் பற்றி எனக்கும் இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் படத்தில் இருந்து விலகிவிட்டேன். இந்த ரோலுக்காக நித்யா மேனன் பிலிம்பேர் சிறந்த நடிகை விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் தற்போது ஜோதிகாவை விமர்சித்து பேசி வருகின்றனர்.