‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாட்டிலா!!!

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது . இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக விஜய் 61 படக்குழுவினர் நாளை ஐரோப்பிய நாடுகளுக்கு கிளம்ப உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுவரை சென்னை, ராஜஸ்தான் போன்ற​ ஹாட்டான லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்தி வந்த 'விஜய் 61' படகுழுவினர் இனிமேல் உறைய வைக்கும் குளிர்ப்பிரதேசங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். இந்த படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.மேலும் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.