விஜய் 61 படத்தில் வடிவேலு நடிக்கிறாரா ???

விஜயும், அட்லீயும் இணைந்து ஒரு மாஸ் படத்தை உருவாக்கி வருகின்றார்கள்.படத்தை பற்றி செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது பல வதந்திகளும் வெளியாகிய வண்ணம் உள்ளது.ஆனால், இப்படக்குழு ஏதாவது வதந்திகள் கிளம்பினால் உடனே அதற்கு விளக்கம் கொடுத்து விடுகின்றனர். அண்மையில் கூட படத்திற்கு தளபதி என்று பெயர் வைக்க ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது, ஆனால் உடனே அதை படக்குழு மறுத்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.அதில் விஜய்யுடன் இணைந்து வடிவேலு நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 7 வருடங்களுக்கு பின் மீண்டும் இருவரும் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.