விஜய் 61 படம் பற்றி ஒரு ரசிகனாக அட்லீ கூறியது என்ன!

இயக்குனர் அட்லீ தற்போது இளையதளபதி விஜய்யை வைத்து படம் தயாராகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடந்த ஒரு விருது விழாவில் விஜய், அட்லீ இருவரும் கலந்துகொண்டனர். மேடையில் பேசிய அட்லீ ” நான் டைரக்டரா பேசணும்னா.. கொஞ்சம் அடக்கி வாசிச்சாகனும். நான் அடிப்படையாகவே தளபதி ரசிகன். அவரை வைத்து படம் பண்ணியாகணும் என்று சினிமாவுக்கு வந்த ஆள் நான்.” “அவரை எப்படில்லாம் பார்க்கணும்னு நெனச்சனோ அப்படி ஒரு படம் பன்னிட்டிருக்கும் போது அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது. சில நேரம் யோசிப்பேன்.. ஒரு இயக்குனராக சில விஷயங்கள் சொல்ல கூடாது.. ஆன தளபதி ரசிகனா பார்த்தா முடியாது.” “உங்களுக்கு இருக்கும் அதே ஆர்வம், 'எப்போடா படத்தை பார்ப்போம்னு'.. அது எனக்கும் இருக்கு. கூடிய சீக்கிரம் அது நடக்கும்” என கூறினார் அட்லீ.