விஜய் 61-வது படத்தில் ஹீரோயின் மாற்றம்

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் '61-வது' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால், சமந்தா மற்றும் ஜோதிகா ஆகிய மூன்று நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராக ஜோதிகா நடிக்க​ மறுத்ததால் அவருக்கு பதிலாக 'ஓகே கண்மணி' நாயகி நித்யாமேனன் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.