விஜய் 61, விவேகம் தொடர்ந்து, நடிகை காஜலின் அடுத்த படம் என்ன!

பாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான 'குயின்' படத்தை தற்போது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகள் நடந்துவருகிறது. தமிழ் நடிகை ரேவதி இயக்குவார் என கூறப்பட்டது, ஆனால் தற்போது அந்த வாய்ப்பு இயக்குனர் ரமேஷ் அரவிந்துக்கு கிடைத்துள்ளது. அவர் தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்கவுள்ளார். தமிழில் தமன்னா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது விஜய்யின் 61, அஜித்தின் விவேகம் படம் ஆகியவற்றில் நடித்துவருகிறார். குயின் ரீமேக்கில் எமி ஜாக்சனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என குறிப்பிடத்தக்கது.