விஜய் vs விஜய்சேதுபதி – தீபாவளி யாருக்கு!

வரும் தீபாவளிக்கு தளபதி விஜயுடன் விஜய் சேதுபதி மோத இருப்பதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத், சீதக்காதி ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்ததை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே தீபாவளிக்கு பிகில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படமும் ரிலீசாக உள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. மேலும் இந்த தீபாவளி ரேஸில் பிகில் மீது சங்கத்தமிழன் எவ்வாறான தாக்கத்தை எற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.