Cine Bits
விஜய ராகவேந்திரா தயாரிக்கும் ஜீவாவின் 29 படம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
விஜய ராகவேந்திரா தயாரிக்கும் மூன்றாவது படத்தில் ஜீவாவின் 29 வது படம் உருவாகிறது . இதனை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் பெற்ற நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் பேசும்போது “ஹெய்ட்ஸ் காமெடி த்ரில்லர் ” கதையில் ஜீவாவின் 29 படம் உருவாகிறது . விக்ரம் வேதா படத்தில் புகழ் பெற்ற சாம் சி.எஸ் இசையமைப்பாளர் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் ஒன்று இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.