விடாமுயற்சியுடன் போராடும் ஜெய் ஆகாஷ் !

திரையுலகில் சில ஹீரோக்கள் வெற்றிக்காக போராடுகின்றனர். முயற்சி செய்யாமல் வெறுமனே இருப்பவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். படம் வெற்றியோ, இல்லையோ தொடர்ந்து தனது முயற்சியை மேற்கொண்டிருப்பவர் ஜெய் ஆகாஷ். ஆனந்தம் ஆரம்பம், காதலுக்கு கண்ணில்லை படங்களை தொடர்ந்து ‘தோள்கொடு தோழா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படம்பற்றி இயக்குனர் கவுதம் கூறியது படித்தவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்காத பட்சத்தில் தவறான பாதைக்கு மாறுகிறார்கள். அப்படி மாறிய 4 மாணவர்கள் கதையாக இப்படம் உருவாகிறது. ஜெய் ஆகாஷுடன் புதுமுகங்கள் ஹரி, ராகுல், பிரேம், மும்பை அக்‌ஷிதா, பெங்களூர் ஜெயஸ்ரீ நடிக்கின்றனர். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு. லியோ பீட்டர் இசை. சென்னை, புதுச்சேரி, உட்டி, கொச்சின் மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடக்கிறது.