வித்தியாசமான தோற்றத்தில் அசரவைக்கும் நயன்தாரா – வைரலாகும் ‘ஐரா’ புகைப்படங்கள்!

விஸ்வாசம்’ திரைப்படத்துக்கு பிறகு  லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம் ‘ஐரா’ ஒரு திகில் திரைப்படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ‘ஐரா’ திரைப்படத்தை கே.எம்.சர்ஜுன் இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் நயன்தாரா. 'ஐரா’ இப்படத்தில் யோகி பாபுவும் கலையரசனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'அறம்’ இத்திரைப்படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார், படத்தொகுப்பு ஜோகேஷ் கார்த்திக் மேற்கொள்கிறார். டீசரைத் தொடர்ந்து வெளியான ‘மேகதூதம்…’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார்.