விமலின் மன்னர் வகையறா படத்திற்கு திரையரங்கு கிடைக்கவில்லை.

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்து, தயாரித்துள்ள படம் மன்னர் வகையறா. இதில் ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா, கார்த்திக் குமார், நாசர்,ஜெயபிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு, நீலிமா ராணி, ரித்திகா உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் ஜாக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் அதிக நட்சத்திரங்கள் நடித்திருப்பதாலும், பெரிய பட்ஜெட் என்பதாலும் நீண்ட நாள் தயாரித்து தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி படம் வெளிவருகிறது. ஆனால் திரையரங்கில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச் ஆகிய படங்கள் வெளியாக உள்ளதால், விமலின் படத்திற்கு திரையரங்கு கிடைக்கவில்லை. இதனை அடுத்து விமல் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரைப்பட விநியோகிப்பவர்களுக்கு, திரையரங்கு உரிமையாளர்களுக்கு வணக்கம். நீங்கள் கொடுத்த அன்பினாலும், ஆதரவினாலும் நான் 24 படங்கள் நடித்து விட்டேன் தற்போது உருவாக்கி உள்ள மன்னர் வகையறா எனது 25 படம் இதில் இரண்டு ஆண்டு உழைப்பை கொடுத்திருக்கிறேன். உங்கள் வீட்டு பிள்ளையாகிய என்னை அரவணைத்து திரையரங்கில் எனது படத்தை திரையிட்டு மீண்டும் அன்பும், ஆதரவையும் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.