விமல் சொந்தமாக தயாரித்து நடிக்கும் படம் மன்னன் வகையறா.

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள படம் மன்னன் வகையறா. இந்த படத்தில் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். விமலுடன் ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா, கார்த்திக் குமார், நாசர், ஜெயபிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு, ரித்திகா, நீலிமா ராணி உட்பல பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து தற்போது வெளியிடுவதற்கு தயாராகி, ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் கதை இரு கிராமங்களுக்கு இடையிலான மோதல், மோதலில் வரும் காதல், செண்டிமெண்ட், நகைசுவை கலந்து தரப்போகிறார்கள். சுருக்கமாக ஹரி பாணியிலான அரிவாள் கதை என சொல்லலாம்.
நேற்று 90 விநாடி டீசரில் வெளியீடு “மண்டையில நாலு கொத்து கொத்தியாவது அவனை பைத்தியம் பிடிச்சு அலைய வைக்கிறேன்” என்றான் வில்லன். ” வெட்டறதா இருந்தாலும் அது என் வீட்டு அருவாளாத்தான் இருக்கணு” என வில்லன் வீட்டு முன் ஹீரோ நிற்கிறார். “உங்க ஊர்ல பத்து பேரு அருவா எடுத்த எங்க ஊர்ல மொத்த பேரும் அருவா எடுப்பாங்க” என்றார் ஹீரோ. இந்த படத்தில் அருவா வீச்சுக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.