விமானம் ஓட்ட லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகை மாதவி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை மாதவி. இவர், தில்லு முல்லு, காக்கி சட்டை, டிக் டிக் டிக், சட்டம், தம்பிக்கு இந்த ஊரு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். அமெரிக்காவைச் சேர்ந்த ரால்ஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டியாகிவிட்டார். அங்கு அவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். கணவருக்கு உதவியாக இருக்கும் அவர், விமானம் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டதோடு, ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளார். ஹீரோயின்களில் இவர் மட்டுமே விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளார். இதே போன்று ஹீரோக்களில் தல அஜித் மட்டுமே விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.