விரைவில் அஜித்துடன் நடிக்கவிருக்கும் ஸ்ரீதேவியின் மகள் – ஜோடியாக இல்லை முக்கிய கதாபாத்திரத்தில் !

அஜித் படத்தில் மகளை நடிக்க வைக்க வேண்டும் என்பது ஸ்ரீதேவியின் கனவாக இருந்தது. அது இந்த படத்தில் நிறைவேறுகிறது. ஏற்கனவே ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அஜித்குமார் சிறப்பு தோற்றத்தில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்குமார்- எச்.வினோத் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் நடிக்கவிருக்கிறார். கதாநாயகியாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித்குமார் வக்கீல் வேடத்தில் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.