விரைவில் நடிகையை மணக்கவிருக்கும் கிரிக்கெட் வீரர் !

இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே விரைவில் நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மனிஷ் பாண்டே இந்திய டி20 அணியில் இடம் பெற்று வருகிறார். ஐபிஎல் வட்டாரத்திலும் முக்கியமான வீரர். மனிஷ் பாண்டே – அஷ்ரிதா ஷெட்டி, இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ரகசியமாக இருந்த இந்த காதல், தற்போது திருமணத்தை எட்டிய நிலையில் வெளியாகி உள்ளது. அஷ்ரிதா ஷெட்டி ஒரு துளு படம் மற்றும் மூன்று தமிழ் படங்களில் நடித்துள்ளார். மற்றொரு தமிழ் படம் விரைவில் வெளியாக உள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்கள். அது பற்றி ஒரு கிசுகிசு கூட வராமல் ரகசியமாக பாதுகாத்து இருக்கிறார் மனிஷ் பாண்டே. தற்போது டிசம்பர் மாதம் மும்பையில் திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் அந்த ரகசியம் உடைந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி மும்பையில் டிசம்பர் 2 அன்று இவர்கள் திருமணம் குறைந்த உறவினர்கள் – நண்பர்களுடன் நடைபெற உள்ளது. திருமணம் மற்றும் வரவேற்பு என இரண்டு நாட்களாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.